Lebal

Wednesday, April 02, 2014

போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உதயகுமார் பேட்டி

மத்திய சென்னை ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பிரபாகர், மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட செனாய்நகரில் உள்ள வட்டார துணை ஆணையர் (மத்தியம்), தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த பிரபாகரை தேர்தல் அலுவலகத்திற்கு வெளிப்புற சாலையில் கூடங்குளம் போராடக்குழுவை சேர்ந்தவரும், கன்னியாகுமரி ஆம் ஆத்மி வேட்பாளருமான உதயகுமார் சந்தித்து பேசினார்.
பின்னர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிய பிறகும், தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது கோர்ட்டை அவமதிக்கும் செயல். இதை நாங்கள் தமிழ் மக்களிடம் எடுத்துக்கூறுவோம். நாங்கள் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை. எதற்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்.ஆம் ஆத்மி எளிய மக்களுக்கான கட்சி. எளிய மக்கள் மட்டும் இருக்கும் கட்சி அல்ல. மக்கள் நலனுக்காக எளிய மக்களுக்காக பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் ஆம் ஆத்மி கட்சியில் இணையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
source:thanthi

No comments:

Post a Comment