Lebal

Thursday, April 24, 2014

புத்தர் உருவத்தைப் பொறித்துக் கொண்டு இலங்கை செல்ல வேண்டாம்! - பிரித்தானியா அறிவிப்பு.

News Serviceபுத்தபெருமானின் அடையாளங்களை பச்சை குத்தி செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு அமைச்சு, இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் புதிய சுற்றுலா எச்சரிக்கை அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் 37 வயதான பிரித்தானிய பெண் ஒருவர் கையில் புத்தபெருமானின் உருவத்தை பொறித்திருத்தமையை அடுத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்தே பிரித்தானிய வெளியுறவு அமைச்சு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment