Lebal

Sunday, April 06, 2014

பெண் இராணுவ சிப்பாய்களை துன்புறுத்திய நான்கு இராணுவ அதிகாரிகள் கைது

News Serviceபெண் இராணுவ சிப்பாய்களை துன்புறுத்திய நான்கு இராணுவ அதிகாரிகள் கைது செய்ய ப்பட்டுள்ளனர். பயிற்சி பெற்றுக் கொண்ட பெண் இராணுவச் சிப்பாய்களை உயர் அதிகாரிகள் துன்புறுத்தும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு இராணுவ அதிகாரிகளை இராவ பொலிஸார் கைது செய்துள்ளனர், நான்கு இராணுவ அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ் பெண் இராணுவச் சிப்பாய்களே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

   எனினும், இந்த சம்பவம் 2012ம் ஆண்டில் இடம்பெற்றதாகவும், தமிழ் பெண்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் இராணுவம் அறிவித்துள்ளது. ஒழுக்க மீறல்களில் ஈடுபட்ட பெண் சிப்பாய்களுக்கு, உயர் அதிகாரிகள் தண்டனை விதித்த காட்சிகளே இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment