Tuesday, May 20, 2014

வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான 42 பக்க அறிக்கை நவநீதம்பிள்ளையிடம் கையளிப்பு! - தயாரித்தவரை அடையாளம் கண்டதாம் புலனாய்வுப் பிரிவு.

News Serviceபோரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர் உள்ளிட்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்களினால் இந்த 42 பக்கங்களைக் கொண்ட அறிக்கை நேற்று நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கையளித்த இலங்கையருக்கு சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

   பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல்களான சவேந்திரா சில்வா, ஜகத் டயஸ் மற்றும் ஐ.நா அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹனே ஆகியோர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தயாரித்த இலங்கையரை புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.குறித்த நபர் நவநீதம்பிள்ளைக்கு தகவல்களை வழங்குபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment