5 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும் என்று
கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரையில் இருந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி
பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தி.மு.க, தோல்விக்கு 3 காரணங்கள் உள்ளன. கட்சியில் சர்வாதிகாரத்துடன் செயல்பட்ட தனி மனிதர் ஒருவரின் ஒன்மேன் ஷோ. அடுத்தது உள்கட்சி பூசல். மூன்றாவது கட்சியில் கருணாநிதியின் தலையீடு இல்லாததுதான் தி.மு.க.வின் தோல்விக்கு காரணம். தற்போது தி.மு.க. கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை. கருணாநிதிக்கு
கொடுக்கப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாகவே அவர் பிரசாரத்தில் கலந்து கொண்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள் பல்வேறு சதி நடைபெற்றது. பணம் கொடுத்தவர்களுக்கு தான் சீட் வழங்கப்பட்டது. அப்போதே இதை நான் சுட்டிக்காட்டினேன். இருப்பினும், அப்போது நான் 5 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment