அமெரிக்க
இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்
செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன், மூடிய
அறைக்குள் இரகசிய சந்திப்பை நடத்தியுள்ளதாக, இன்னர் சிற்றி பிரஸ்
தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள போதிலும், இது தொடர்பான மேலதிக விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
தனது சந்திப்புகள் தொடர்பாக நிஷா பிஸ்வால், டுவிட்டரில் பதிவு செய்வது வழக்கம் என்ற போதிலும், புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பு பற்றிய தகவலை அவர் வெளியிடவில்லை.
இந்தநிலையிலேயே, புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் மூடிய அறைக்குள் அவர் பேச்சு நடத்தியதாக, இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவர், பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுக்கான பிரியாவிடை நிகழ்வில் அவர் பங்கேற்றுள்ளார்.
சிறிலங்கா தூதரகத்தின் இந்த நிகழ்வு இனிமைதாக அமைந்தது என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment