நேற்றைய
தினம் ஐ.நா ஊடகவியலாளர் மாநாட்டில் இன்ரர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர் கேட்ட
கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறி நழுவியுள்ளார்கள் அதிகாரிகள்.
கேள்வி நேரத்தின்போது , இன்ரர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர் எழுந்து
பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18 தினத்தை இலங்கையில் உள்ள
தமிழர்கள் நினைவுகூரமுடியாத நிலையில் உள்ளார்கள். அப்படி எந்த ஒரு
நிகழ்வையும் நடத்த கூடாது என்று, இலங்கை அரசு தமிழர்களுக்கு கட்டளை
பிறப்பித்துள்ளது. இவ்வாறு இலங்கை அரசு தடைவிதித்துள்ளதே அதனைப் பற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியானதொரு
கேள்வியை சற்றும் எதிர்பாராத ஐ.நா அதிகாரிகள் திணறிப்போனார்கள். ஒருவாறாக
இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று கூறி மழுப்பியுள்ளார்கள்.இருப்பினும் குறித்த ஊடகவியலாளர் விட்டபாடாக இல்லை. அப்படி நடந்துள்ளது என்று பிரச்சனையை விபரித்துள்ளார். ஈழ யுத்தத்தில் தமிழ் பெண்கள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமைதி காத்து வருவது போலவே, யுத்தத்தில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடை தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாத்து வருவதாக அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
No comments:
Post a Comment