Lebal

Saturday, May 17, 2014

நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு மகிந்த நடத்திய மூன்றரை மணி நேரப் போராட்டம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் காலை 11 மணிக்கே பாஜக ஆட்சியமைப்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை காண்பித்திருந்தன.
உடனடியாகவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நரேந்திர மோடிக்குகு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்க முயன்றார்.
ஆனால் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மகிந்த ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பை நரேந்திர மோடி எடுக்கவில்லை.

அவர் தனது தாயாரிடம் ஆசி பெறுவதற்காக அப்போது சென்று கொண்டிருந்தார்.
தாயாரைச் சந்தித்து ஆசி பெற்று விட்டுத் திரும்பிய பின்னர், பிற்பகல் 2.30 மணியளவிலேயே சிறிலங்கா அதிபரால் நரேந்திர மோடியுடன் பேச முடிந்தது.
தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துக் கொண்ட மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவுக்கு வருமாறும் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட அழைப்பை விடுத்தார் என்றும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment