இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது இனஅழிப்பு மற்றும் போர்குற்றத்தில்
ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள் , இராணுவ தளதிகள் ஆகியோரது முதற்பெயர்ப்
பட்டியல், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இன்று
கனடாவில்வெளியிடப்படுகின்றது. இன்று கனடாவில் ரொற்ன்ரோவில் இடம்பெறுகின்ற
தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வரங்கிலேயே இப்பட்டியல்
வெளியிடப்படுகின்றது. 16 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் 424
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாகவே
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இப்பட்டியல் வெளியிடப்படுகின்றது.
St peter and Paul , 231 Milner Avenue (Markham and Milner )எனும் முகவரியில் இடம்பெறுகின்ற தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வானது, பொதுமக்களின் வசதிக்கேற்ற காலை 11மணி முதல் அரங்க திறக்க இருப்பதோடு மதியம் 2:30 மணி முதல் இடம்பெறுகின்ற நிகழ்வரங்கிலேயே, சட்டவிளக்கங்களுடன் இப்பெயர்பட்டியல் வெளியிடப்படுகின்றது.
பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்து கொண்டதன் வெற்றிக்களிப்பினை சிங்கள தேசம் தென்னிலங்கையில் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்படும் இப்பெயர்பட்டியல், சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியினைக் கொடுக்கும் என நா.தமிழீழ அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாதம் ஊடகசேவை
No comments:
Post a Comment