Saturday, May 24, 2014

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு; தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது



பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில், பங்கேற்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜபக்சேவை அழைத்தற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள, வட்டகாடு, கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னு மகன் வெற்றிவேல் (31) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். வெள்ளிக்கிழமை, 10 மணியளவில், சேலம் நீதிமன்ற வளாகத்தின் முன் உள்ள நீதிதேவதை சிலை முன்பு நின்று, தன் உடல் மீது தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு, மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள், தண்ணீர் ஊற்றி வெற்றிவேலை காப்பாற்றினர்.
அப்போது, "மோடி பதவியேற்பு விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்த செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், தன்னுடைய எதிர்ப்பை வெளிகாட்டும் நோக்கில் தீக்குளிக்கிறேன் என, ஆவேசமாக கூறினார்.
தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸார், வெற்றிவேலை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக, வெற்றிவேல் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவசுப்பிரமணியம்

No comments:

Post a Comment