Lebal

Tuesday, May 20, 2014

ஜெயலலிதா மத்தியில் பேரம் பேசும் பலத்தை இழந்து விட்டாராம் – மகிழ்ச்சி கொண்டாடுகிறது சிறிலங்கா

இந்தியாவில் ஆட்சியமைக்கவுள்ள நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் பேரம் பேசும் பலத்தை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இழந்திருப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,

அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று விட்டதால், நரேந்திர மோடி அரசாங்கத்திடம் பேரம் பேரும் பலத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இழந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டின் முறையற்ற தலையீடுகளின்றி, மத்திய அரசாங்கத்தினால் செயற்பட முடியும்.

புதுடெல்லியில் சக்திவாய்ந்த அரசாங்கம் ஒன்று உருவாவது எமக்கு நல்லது.

எந்த முடிவையும் மத்திய அரசாங்கமே எடுக்கும்.

அது தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்தினதும் முறையற்ற தலையீடுகளற்றதாகவும் இருக்கும்.

இதுகுறித்தும் சக்திவாய்ந்த அரசு ஒன்று அமையவுள்ளது குறித்தும், பெரும்பான்மைக்கு நரேந்திர மோடி அரசாங்கம் எந்தக் கட்சியின் தயவையும் நம்பியிருக்கத் தேவையில்லாதது குறித்தும் நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இதன் அர்த்தம் என்னவென்றால், ஜெயலலிதா 39 ஆசனங்களில், 37 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தாலும், மத்திய அரசாங்கத்தில் அவரால் செல்வாக்குச் செலுத்த முடியாது என்பதே.

நரேந்திர மோடிக்கும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல, அதுகுறித்த விரிவாக விளக்கமளிக்கவில்லை.  source:pp

No comments:

Post a Comment