இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக
நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்திய
விவகாரத்தை, சிறிலங்கா அதிபர் செயலகம் மூடி மறைத்து விட்டது. நேற்றுக்காலை புதுடெல்லியில் இருநாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்புத் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கையில், நரேந்திர மோடியுடனான சந்திப்பில், நல்லிணக்க முயற்சிகள், மீள்கட்டுமான. புனர்வாழ்வு நடவடிக்கைகள், மீனவர்கள் விவகாரம், மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் குறித்தே பேசப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
13வது திருத்தச்சட்டம் குறித்து ஒரு வார்த்தையேயும் அதில் கூறப்பட்டிருக்கவில்லை.
ஆனால், நேற்று புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நரேந்திர மோடி வலியுறுத்தியதை இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் போட்டுடைத்து விட்டார்.
இதனால், 13வது திருத்தச்சட்டம் குறித்து பேசப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற சிறிலங்காவின் முயற்சி தோல்வி கண்டுள்ளது.

புதுடெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை கொழும்பு புறப்பட்ட மகிந்த ராஜபக்ச.
No comments:
Post a Comment