பாட்னாவின் புத்த கயாவில் கடந்த ஆண்டு அவரை
கொல்ல குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் அதிஷ்டவசமாக அதில் இருந்து அவர்
தப்பித்து விட்டார்.
இதனையடுத்து, தற்போது அவர் பாஜகவினால் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்
படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நரேந்திர மோடியை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி
கொல்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக விசுவ இந்து பரிஷத் பரபரப்பு
தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் அசோக்சிங்கால் இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தும்
வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை உச்சகட்ட எச்சரிக்கை அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நடந்ததை போன்று, இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் அமையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மோடியை கொல்வதற்கு இந்திய முஜாகிதீன், பாகிஸ்தானின் உளவு
அமைப்பு ஐ.எஸ்.ஐ., மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோர் கூட்டுச்சதி
செய்துள்ளனர்.
தீவிரவாதம் என்பது நமது நாட்டில் நீண்ட காலமாகவே மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. இந்த சவாலை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள உளவுத்துறை எச்சரிக்கையின்
அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மோடியின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட
வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment