Lebal

Tuesday, May 06, 2014

உண்மை கண்டறியும் புதிய குழுவை சிறிலங்கா அனுப்புகிறார் நவநீதம்பிள்ளை

சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் சிறப்பு ஆணைபெற்ற பிரதிநிதிகளின் புதிய குழுவொன்றை விரைவில் அனுப்ப ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பான தகவல், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தில், இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


இது தொடர்பான ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முறைப்படியான அறிவிப்பு இந்தவாரம் கிடைக்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அதேவேளை, புலம்பெயர்ந்தோர் தொடர்பான ஐ.நா சிறப்புப் பிரதிநிதி இம்மாதம் 19ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment