Tuesday, June 03, 2014

தமிழீழத் தேசிய உதைபந்தாட்ட அணியின் முதலாவது விளையாட்டு!

tamileeam_fa_team_won_armenian_201406021

தமிழீழத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கும் ஆர்மேனியா சூர்யோயே என்ற அணிக்கும் இடையேயான உதைபந்தாட்டப் போட்டி சுவீடன் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளன.
இன்றைய போட்டியில் தமிழீழ அணி 0:2 என்ற கோல்களின் ரீதியில் வெற்றியீட்ட முடியவில்லை. நா
ளை செவ்வாய்க்கிழமை குர்திஸ்தான் அணியை எதிர்த்து தமிழீழ அணி மோதவுள்ளது.
அங்கீகரிக்கப்படாத தேசங்களுக்கான உதைப்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியை CONIFA என்ற அமைப்பு வருடம் தோறும் நடாத்தி வருகின்றது. இப்போட்டியில் தமிழீழம் எனும் எமது நாடு சார்பாக உலகம் எல்லாம் பரந்து வாழும் தமிழீழ இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இவ் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
அங்கீகரிக்கப்படாத தேசங்களுக்கான 2014ம் ஆண்டுக்கான உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணபோட்டியில் தமிழீழ அணி இரண்டாம் முறையாக பங்கெடுக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழீழத் தேசிய உதைபந்தாட்ட அணியின் முதலாவது விளையாட்டு!http://youtu.be/PLzGmMSE9Go

No comments:

Post a Comment