Monday, September 22, 2014

நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி,

நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி,உலகில் தமிழர் வாழும் பகுதிகளில் களமிறக்கப் பட்டுள்ள 1750 பேர் கொண்ட தமிழ் பேசும் சிங்களப் புலனாய்வு அணி  தமிழர் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் செயல்ப்படும் அமைப்புக்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் தமிழ் ஈழச் செயற்பாட்டாளர்கள் என்று பகிரங்கப் படாமல் செயற்படும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும்  சுற்றி வளைத்துள்ள இவர்கள்  நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை மட்டும் நெருங்க முடியவில்லை  நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை அவர்களின் பகிரங்கச் செயற்பாடுகளால் கோத்தபாயவினால்  எதுவும் செய்ய முடியவில்லை.என்று ஒரு அமைச்சரிடம் குமுறிய கோத்தபாய,

நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஜனநாயக ரீதியாக உலகின் பல நாடுகளில் செயற்படுகிறார்கள் எந்த ஒருநாடும்  அவர்கள் மீது இதுவரை ஒரு குற்றச் சாட்டும் முன்வைக்கவில்லை எனவே அவர்கள் மீது நாம் தேவையற்ற குற்றச் சாட்டுகள் முன்வைத்தால் உலகநாடுகள் சில நேரம் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்துடன் பேசச் சொல்லி வற்புறுத்தலாம் எனவே அவர்களை  வேறுவழியில் பார்த்துக் கொள்வோம் என்று கோத்தபாய வெளிநாடுகளில் உள்ள தூதுவர்களுக்கு அறிவித்திருக்கின்றார்.இதை வேடிக்கைபார்த்துக் கொண்டு இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்கள் இருவர் இருந்துள்ளனர் அவர்கள் கோத்தபாயவினால் ஓரங்கட்டப்பட்ட நீண்டகால ஐக்கிய சுதந்திரமுன்னணி ஆதரவாளர்கள்.அந்த அமைச்சர்களினால் அவர்களினால் இந்தவிடயம் கசிந்துள்ளது
இந்தச் சூழலில் தப்புமா தமிழ் இனம். இத்தாலியில் உள்ள 117.000.சிங்களவர்களைக் கண்காணிக்க 60 பேர்கொண்ட அணியையும் கோத்தபாயவின் நேரடிக் கண்காணிப்பில் களம் இறக்கப்பட்டுள்ளது இவர்கள் இத்தாலியில் உள்ள விடுதலைப் புலிகள் அணி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் அணி,தமிழ் செயற்பாட்டாளர்கள்.சரத் பொன்சேகா அணி, ஐக்கியதேசியக் கட்சி அணி. ஜே வீ பீ  அரசு எதிர் அணி.மகிந்த அரசின் மென்போக்கு அமைச்சர்கள் அணி. என்று பல அணிகளைக் கண்காணிக்கும் செயலில் உள்ளனர் இவர்களால் இத்தாலியில் சிங்களவர்களுக்கிடையில் குளுமோதல்கள் உருவாக்கப்பட்டு அது அங்கு பலமுறை நடந்துள்ளது.
மிகவும் நேர்த்தியான முறையில் தமிளும் தமிழர் அரசியலும் கற்பிக்கப்பட்ட சிங்களப் புலனாய்வாளர்கள் மட்டக்கிளப்பு திருகோணமலை யாழ்ப்பாணம்  அம்பாறை  மன்னார். வவுனியா என 2009.இறுதி இன அழிப்பிற்குப் பின். நீண்டகாலம் தமிழர் பகுதியில் புலனாய்வு சேவையில் இருந்த சிங்களவர்களில்.சரளமாக தமிழ் பேசக் கூடிய புலனாய்வு அணியைத் தயார்செய்து.அதிவிசேட சிறப்புப் பயிற்ச்சியுடன் கோத்தபாயவின் பணிப்பில்.தெரிவு செய்யப்பட்டு, தமிழர்களின் செயற்பாடுகள் உள்ள நாடுகளில் களமிறக்கப்பட்டுச் செயல்ப் படுகின்றனர்.
தமிழர்களை விட சரளமாக தமிழிலும்  தமிழர் தாயக நிலப்பரப்பையும் தமிழ் ஈழப் போராட்டத்தின் முழு விபரங்களையும் கற்றுத் தேர்ந்த சிங்களப் புலனாய்வாளர்கள் சுமார் 1750.பேர்கொண்ட ஒரு அணி  நீண்ட பரீட்சிப்பின் பின் கருணா, பிள்ளையான்,டக்ளஸ் போன்றோரின் ஆலோசனையில் அரசுடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்ட விபரங்களின் அடிப்படையில்.விடுதலைப் புலிகளின் அணியில் இதுவரை வெளிவராத முக்கிய நபர்கள் தொடர்பான கருணா தெரிவித்த நபர்களின் பூரண விபரங்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட  1750.பேர்கொண்ட அணி, இந்த அணி இறுதி யுத்தத்தின் பின் பல புலிகளின் உயர் தளபதிகள் ரகசியச் சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களுடன் சிறையில் இருந்து விடுதலையானவுடன் தப்பி வெளிநாடு வந்ததாகவும் யுத்தகாலத்தில் ராணுவத்துடனான மோதல்களில் தலைமை தாங்கிய புலிகளின்  இதுவரை வெளிவராத பெயர்களைக் கூறி நம்பவைக்கும் அளவுக்கு தேர்ச்சியுடன் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலருக்கு தமிழ்ப் பெயரில் வடகிழக்கின் சில ராணுவத்தின் பிடியில் உள்ள பகுதிகளில் விலாசமிடப்பட்ட கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு களமிறக்கப் பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்பதுடன். அவர்கள் அகதி அந்தஸ்துக் கோரும்போது .விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு நேர்த்தியாகப் பதில் கோரும் அளவுக்கு சான்றுகளும் ஒப்படைக்கப் பட்டு பலர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது தெரிய வருகிறது,இவர்கள் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் நிலை கொண்டுள்ளனர் இவர்களுக்கு சிறப்பாகக் கடமையாற்றின் அவர்கள் இருக்கும் நாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்களில் சிறந்த பதவிகளும் சலுகைகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது அப்படி அவர்கள் செயற்படும் நாடுகளில் அவர்களின் செயற்ப் பாட்டுக்கு இடயூறு வந்தால் தலை மறைவாகி.இலங்கைத் தூதுவராலயத்தில் அவர்களின் உண்மையான பெயருடன் கடமையாற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன்.
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ்ப் பெயரில் உள்ள கடவுச் சீட்டின் பிரதி அடையாள அட்டையின் பிரதி போன்றவற்றுடன் இலங்கைப் புலனாய்வு அறிக்கையும் சேர்த்து அந்தந்த நாடுகளில் உள்ள அகதி அந்தஸ்து விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்து அவர்களின்  கவனத்துக்குக் கொண்டுவந்து இலங்கையில் மீண்டும் பிரிவினையை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஊக்குவிக்கின்றனர் என்று கொடுப்பதர்க்கு இலங்கை அரசினால் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.இந்த புலனாய்வாளர்களின் தமிழ்ப் பெயரில் தயாரான அளிக்கைகள் ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளைவிட விசேட பயிற்ச்சி பெற்ற புலனாய்வு அணி தமிழகத்தைக் குறிவைத்து சுமார் 180 பேர்கொண்ட அணி மூன்று பிரிவுகளாகக் களமிறக்கப் பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் தமிழில் நன்கு தேர்ச்சிபெற்று  தமிழ் பெயர்கள் கடவுச் சீட்டுடன் களமிறக்கப்பட்ட கோத்தபாயவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவ்விடயம் மகிந்த குடும்பத்தினால் தெற்கில் பழிவாங்கப்பட்டு உயிர்ப்  பாதுகாப்பிற்காக ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அரசினால் தேடப்படும் சிங்கள ஊடகவியலாளர்.ஒருவரினால் வெளியிடப்பட்டுள்ளது. இவரின் சகோதரர்கள் இராணுவத்தில்  உயர் பதவியில் உள்ளவர்கள்.  இலங்கையில் மக்களை நிம்மதியாக இருக்கவிடாமல் ஒருபதட்ட நிலையில் வைத்திருக்கவும் தொடர்ந்தும் மகிந்த குடும்பமே இலங்கையை ஆட்சில் வைத்திருக்கவும் செயப்பட்டுள்ள ஒரு நீண்டகால ஏற்பாடுகளாகும்.
இதனூடாக தமிழகத்தில் உள்ள உளவாளிகள் தமிழகத்தை மத்திய அரசுடன் நெருக்கிச் செயலாற்ற விடாமல்  தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்று தொடர்ந்தும் உலகிற்குக் காட்ட எடுக்கும் முயற்ச்சியுடன்  தமிழகத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அகற்றுவதுடன் ஈழத்தமிழர் ஆதரவுப் போக்கை தமிழகத்தில் இல்லாமல் செய்வது ஈழ ஆதரவு அணிகளை ஏதோ ஒரு சிக்கல்லுக்குள் விழ வைப்பது இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஊடுருவி உள்ள புலனாய் வாளர்களை செயல்ப்ப்படுமாறு கட்டளையிடப் பட்டுள்ளது,
விரைவில் தமிழகம் தனியாட்சி  கோரி மத்திய அரசிடம் இருந்து பிரிந்து போக வாய்ப்பு உள்ளதாக ஒரு போலி புலனாய்வு அறிக்கையைத் தயாரித்து இலங்கைக்கு விஜயம் செய்த மகிந்தரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சுப்பிரமணியம் சாமி ஊடாக மத்திய அரசுக்கு செய்திகள் அனுப்பப் பட்டுள்ளது.இதில் தமிழ் நாட்டில் அண்மையில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழகக் கட்சிகள் சிலவும் பிரதமர் மோடியிடம்.தமிழ் நாட்டில் இருந்து ஜெயலலிதாவை அகற்றினால்தான்.தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு உயிரூட்ட முடியும் என்றும் பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் வேரூன்றும் என்று போட்டுக் கொடுத்துள்ளனர்,
இதுவும் பிரதமர் மோடியினால் இலங்கைப் படையினரால் இடம் பெறும் தமிழக மீனவர் மீதான தாக்குதலுக்கு ஒரு கண்டனம் கூட செய்யாமல் இருப்பதற்குக் காரணமாயிற்று .வரவர மத்திய அரசுடன் மாநில அரசு முரண்படும் நிலையையும் தோற்றுவிக்கும் மகிந்தராஜபக்சவின் தந்திரம்.இதுவே இலங்கையின் வடமாகாண சபையுடன் மகிந்தரின் ஆளுனரைவைத்து முறுக்கேற்றும் விடயத்தைக் கையாளும் தந்திரமும்.மாகாண சபை எதுவும் செய்ய முடியாமல் ஆளுநரே எல்லாவற்றையும் செய்யும் தந்திரமும்,அதேபோன்று தமிழக அரசை தமிழக மீனவர்சார்பாக எதுவும் செய்ய முடியாமலும். மத்திய அரசும் எதுவும் செய்யவிடாமல் தமிழக அரசுமீது பொய்யான தகவல்களை இலங்கைத் தமிழர்களை ஆதாரம் காட்டி மகிந்தரால் உருவாக்கப்பட்டவர்களை வைத்து கலகம் மூட்டி புலனாய்வு அறிக்கை கொடுப்பதுமாக காய் நகர்த்தும்   மகிந்தரின் தந்திரத்தில் இந்திய மத்திய அரசை சுப்பிரமணியன் சாமியை வைத்துச் சிக்க வைத்தது,
இந்த அணியில் தனிய தமிழ் பேசும் சிங்களவர்களே இருக்கின்றார்கள் வெளிப் பார்வைக்கு ஈழத்தமிழர்களே சம்பந்தப்பட்டதாகக் காட்டும் தமிழ் பேசும் சிங்களவர்களை வைத்து செயல்ப்படும் மகிந்தரின் தந்திரவலயத்துள்  உலகின் பல நாடுகளிலும் இந்த அணியினர் பிரித்து விடப்பட்டுள்ளனர்.இவர்களிடம் இருப்பது இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடனான கடவுச் சீட்டுக்களே.இவர்கள் யாரைச் அந்தித்தாலும் விடுதலைப் புலிகளின் செயால்ப்பாட்டுடன் இறுதி யுத்தமும் இராணுவத்தால் செய்யப்பட்ட கொடுமைகள் உட்பட ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத பகுதிகள் கொண்ட விலாசத்துடனான கடவுச் சீட்டுக்களும் அடையாள அட்டைகளுமே இவர்களிடம் உள்ளது,என்பது குறிப்பிடத் தக்கது,
இவர்களில் சிலர் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் செயல்ப்பாட்டலர்களுக்கு உத்தரவிடும் நிலைக்கு வந்துள்ளனர்  புலிகள் அணி நெடியவன் அணி தமிழர் பேரவை மக்கள் செயல்ப்பாட்டில் உள்ள பலர் அடையாளம் தெரியாமல் விடுதலைப் புலிகள் கட்டமைப்பில் உயிர் தப்பி உள்ள உயர்மட்ட நிலையில் உள்ளவர்களின் பெயர்களில் தொடர்புகொண்டுள்ளனர் அதனூடாக பல நகர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன புலிகளின் சிலர் புலிகளின் உயர் மட்ட நிலையில் இருந்தவர்களின் முழுவிபரங்களையும் கூறி நாந்தான் அவர் என்று இவர்களுடன் தொடர்பில் இருந்து சில கட்டளைகள் இடுவதாகவும் தெரிகிறது,
இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் வெளிநாட்டு பல்துறை வர்த்தகம்சார்ந்த ஒரு தொழில் அதிபரின்  தொலை பேசி சிம் காட்கள் இப்போது இலவசமாக வழங்கப்படுவது .இலங்கை தொலைத்தொடர்பு ஆணையத்தின் அனுமதி பெற்றவர்  குறிப்பிட்ட பல நாடுகளில் இலவசத் தொடர்பு கொள்ளலாம் என அடிக்கடி அறிக்கப்படுவது இலங்கையில் இந்த  சிம் அட்டைகள் இலவச இணைப்பு உள்ளன ஆனால் இந்த சிம் அட்டைகளில் உரையாடுவது அனைத்தும் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே நடைபெறுகின்றது.அதில் இலங்கைப் லுனைவினரின் கண்காணிக்கப்பட்டே  தொலை பேசி உரையாடல் இடம் பெறுகின்றது.
நிஷாந்த வின்ட் குமார, உபாலி ரட்ணசிங்க, மற்றும் சுரங்க விஜயக்கோன் ஆகிய மூன்று சிங்கள புலனாய்வாளர்கள் கொண்ட 20 அடங்கிய அணி இப்போது மலேசியாவுக்கு உளவு நடவடிக்கைக்கு வந்துள்ளன. இவர்கள் நான்கு பிரிவுகளாக  கோலாலம்பூர். விமான நிலையம் ஐக்கியநாடுகளின் காரியாலம். ஜோகூர்பாரு.அங்கு  ஸ்குடாய் எனும் இடத்தில் சிலர் நிலை கொண்டுள்ளனர்.இவர்களில் சிலர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருகின்றனர், சிங்கப்பூரில் இலங்கையின் முஸ்லிம் அமைச்சருக்குச்  சொந்தமான வீட்டில் இவர்களில் சிலர் அடிக்கடி ஓன்று கூடுவதும் தெரியவந்துள்ளது
இவர்களின் நோக்கம் மலேசியாவில் உள்ள எமது போராளிகளையும் மற்றும் எமது கட்டமைப்புக்களையும் உளவு பார்ப்பதும் மற்றும் மலேசியாவில் உள்ள சிலருடன் சேர்ந்து பெரிய வியாபாரிகள் போல் நடித்து அங்குள்ளவர்களை வலையில் வீழ்த்தி  தமிழ் செயல்ப்பாட்டாலர்களைக் கைது செய்வதும் மலேசியாவில் உள்ள தமிழ் ஆதரவாளர்களை மலேசிய அரசுடன்  முரண்படவைப்பதுவுமே.இதற்கு உதவ சில மலேசிய உயர் அதிகாரிகள்  இலங்கை சென்று உல்லாசமாக இருந்துவர விசேட சலுகைகளுடனான  சேவைகள் வழங்கப் பட்டுள்ளன.
இவர்கள் சராளமாக யாழ்பாணத்தமிழில் பேசக்கூடியவர்கள் இவர்கள்  கோத்தபாயவின் நேரடி வழி நடத்தலின் கீழ் உள்ளவர்கள்.இவர்கள் வட- கிழக்கில் வெள்ளை வானில் எமது உறவுகளை கடத்தி கொண்றொழித்தவர்கள். கோத்தபாயவின் அனுமதியுடன் திருகோணமலையில் உள்ள ராணுவப்புலனாய்வாளர்ககளுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு உதவினர் இவர்கள் உலகின் பயங்கரவாதிகள் என்று பட்டியலிடப்பட்ட முஸ்லிம் அமைப்பைச் சார்ந்தவர்களுடன் திருமலையில் உள்ள ராணுவ முகாமில் கொத்தபாயவின் வழிகாட்டலில் இயங்கியது   தொடர்பாக பல சிங்கள இணையங்களில் செய்திகள் வெளியாகியது நினைவிருக்கலாம்,
புலம் பெயர்ந்துவாழும் உறவுகளும் தமிழக உடன் பிறப்புக்களும் இவ்விடயத்தில் மிகவும் கவனமாகச் செயல்ப்படுவது  தற்போது காலத்தின் தேவையாகும்.நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தைப் போன்று புலம் பெயர் நாடுகளில் பகிரங்கமாகச் செயற்படும் அமைப்புக்களுடன் சேர்ந்து செயட்படுவதன் ஊடாக சிங்கள அரசின் சதிவலையில் இருந்து புலம்பெயர் தமிழர்கள்,தங்களைத் தர்க் காத்துக் கொண்டு.தமிழர்களின் கனவை நிறைவேற்றப் போராடலாம்.
மகிந்த அரசினால் முன்னெடுக்கப்படும் இந்த நகர்வை முறியடித்து எதிர்காலத்தில் தலை நிமிர்ந்து வாழ சிறந்த வழிகளைப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் முன்னெடுப்பதே சாலச் சிறந்தது,
நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை முடக்க கோத்தபாயவின் பகீரத முயற்சி, பகிர்ந்தளிக்க :
source:worldtamilwin

No comments:

Post a Comment