Lebal

Monday, October 19, 2015

சிங்கள நாய்கள் கறிவேப்பிலை போல பாவித்து விட்டு துாக்கி எறிந்துவிட்டார்கள்- கதறும் கருணா !



தங்களின் தேவைகளுக்கு எங்களை உபயோகப்படுத்திவிட்டு இப்போ எம்மைத் கறிவேப்பிலை போல துாக்கி எறிந்துவிட்டார்கள் சிங்கள நாய்கள்‘ என கருனா குமுறியுள்ளதாக கருனாவின் வெளிநாட்டு நண்பர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.தன்னையும் கைது செய்யப்போகின்றார்கள் என்ற கிலியில் இருக்கும் கருனாவை வெளிநாட்டில் வாழும் அவனது நண்பர் தொடர்பு கொண்டு நிலமைகள் பற்றி கேட்ட போதே கருனா இவ்வாறு தெரிவித்ததாக குறித்த நபர் தனது முகப்புத்தகத்தில் கருனாவுக்கு ஆதரவாக கவலை தெரிவித்துள்ளார்.பிள்ளையானின் கைதுக்கு அடுத்ததாக , தமிழினத்துரோகியான கருனாவின் கைதும் இடம்பெறக்கூடும் என ஏராளமான தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தான் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றும் எவரினாலும் தம்மைக் கைது செய்ய முடியாது எனவும் அரசாங்கம் தம்மைக் கைது செய்யும் என்ற அச்சம் கிடையாது என அவர்&ன்ப்ச்ப்; ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாராம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் அண்மையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் கிடையாது எனவும் கருணா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சரவையில் அங்கம் வகித்து வரும் நிலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1989ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், 5000 ரி56 ரக ஆயுதங்களை வழங்கி இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக யுத்தம் செய்ய ஊக்குவித்ததாகத் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் இந்த அரசியல் நாடகம் மிகவும் சுவாரஸ்மானது விடுதலைப் புலிகளை ஊக்குவித்த அரசாங்கம் நல்லாட்சியை உறுதி செய்ய பழையவற்றை தோண்டுவதாக தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு அரசாங்கங்களை திருப்திபடுத்த வேண்டுமாயின் கடந்த அரசாங்கத்தில் தாம் வகித்த பங்கு தொடர்பில் சாட்சியமளிக்கத்தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் தீர்மானம் இறுதிக் கட்ட மனித உரிமைமீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காகவே மட்டுமாகும் என அவர் தெரிவித்துள்ளார். 1983 முதல் 2008 ஆண்டு வரையிலான சம்பவங்கள் பற்றி விசாரணை செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983ம் ஆண் முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொத்த நாட்டையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சில தரப்பினர் தமது பெயரைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இறுதிக் கட்ட யுத்த்தின் போது தாம் இந்தியாவில் இருந்ததாகவும் அவர் தெரிவிதள்ளார். கலப்பு நீதிமன்றத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். உள்ளக விசாரணைகளின் மூலம் அரசாங்கத்தின் குற்றச் செயல்களை கண்டறிய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.அம்மாவுடன் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும் எந்தவொரு பிரதேசத்திற்கும் பிரச்சினையின்றி செல்லக்கூடிய நிலையில் தாம் இருப்பதகாவும் கருணா தெரிவித்துள்ளார்.
source:athirvu

No comments:

Post a Comment