வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு கோட்டை ரயில்
நிலையத்துக்கு முன்பாக பொது எதிரணி நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை
முன்னெடுத்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து, இதில்
பங்கேற்று அரசுக்கு எதிராகக் கோங்களை எழுப்பினர். ரணில் விக்கிரமசிங்க,
மனோ கணேசன், சுமந்திரன், விக்கிரமபாகு, சிறிதுங்க ஜயசூரிய, சரத்
மனமேந்திரா, ஹேம குமார நாணயக்கார ஆகியோர் உட்படப் பல அரசியல் பிர
முகர்களும் கலந்து கொண்டனர். அத்துடன், தொழிற்சங்கங்கள், ஊடக அமைப்புகள்
ஆகியனவும் ஆர்ப்பாட்டத்துக்குத் தமது ஆதரவை வழங்கும் வகையில்
பங்கேற்றிருந்தன.
.
பல அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிற்பகல் 3 மணியளவில்
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக ஜனா திபதி செயலகத்தை நோக்கிச்
சென்றஆர்ப்பாட்டக்காரர்கள், "கொலையாளி ராஜ பக்ஷவை விரட்டியடிக்க
வேண்டும்'', "தண்ணீருக்கு குண்டு தான் பரிசா?'' என்றெல்லாம் கோஷம்
மெழுப்பினர். பஸ் மீது ஐ.தே.க. எம்.பிக்கள் ஐ.தே.கவின் எம்.பிக்கள்
சிலர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இருந்த பஸ் ஒன்றின் மீது ஏறி
கோமெழுப்பினர். இதனால் அவ்விடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
.
செயலகத்தை சூழப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும், கலகம் அடக்
கும் பொலிஸாரும் குவிக்கப் பட்டிருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.
அதேவேளை, நேற்றைய ஆர்ப்பாட்டத்தால் காலி வீதியில் பெரும் போக் குவரத்து
நெரிசல் ஏற்பட்டது. அவ்வீதி யூடாக நடந்துசென்ற மக்களும் பெரும்
அசெளகரியங்களுக்கு உள்ளாகினர். -
No comments:
Post a Comment