Lebal

Friday, December 09, 2011

அனைத்துலகம் ஆதரவா? ஆணைக்குழு முன் சாட்சியமளித்தவர்களை கொல்லும் சிறிலங்கா இராணுவம்

தமிழர்கள் வாய்மூடி மவுனிகளாக உள்ள வேளை சிங்கள இனவெறி அரசு தமிழரை கொன்று குவித்து அதனை சர்வதேச விசாரணைக்கு ஒத்துளைக்காமல் தன்னைத்தானே நீதிபதிகளாகவும் நீதியாளர்களாகவும் கருணை கொண்டவர்களாகவும் காண்பிக்கும் அதே நேரத்தில் தமிழரை படுகொலை செய்த இனவெறி சிங்கள அரசு தமிழரின் படுகொலைக்கு சாட்சிகளாகவுள்ள சாட்சியம் அழித்த தமிழர்களை அழித்தொழிக்கும் திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.

கட்டுவனை சேர்ந்த இடுயஇஞர் ஒருவரை சுண்ணாகத்தில் திருடியதாக கூறி விசாரணைக்கு என அழைத்து சென்ற சிங்கள இனவெறி காவல்துறை அவரை சிங்கள இனவெறி இராணுவத்திடம் ஒப்படைத்தது. இராணுவத்திடம் ஒப்படைத்த இளைஞரை சிங்கள இனவெறி இராணுவம் மேலதிக விசாரணை என்ற பெயரில் சிங்கள இனவெறி புலயெயய்வாளர்கள் முன் ஒப்படைத்தது. சிங்கள புலயெயய்வாளர்கள் விசாரணை செய்த இடத்தில் மேலதிகமாக மூன்று இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற போது இராணுவத்துக்கு எதிராக நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் கொடுத்த நீங்கள் இன்னும் ஏதாவது ஆணைக்குழு வந்தாலும் சாட்சியம் அழிப்பீர்களா என்று கேட்டு கேட்டு தாக்கினர்.தாக்கிய பின் சாட்சியம் அழித்த எந்த ஒரு தமிழரும் உயிருடன் இருக்க கூடாது என்பதுவே எங்கள் சிங்கள அரசின் நிலைப்பாடு என்று கூறியதுடன் இளைஞசமயடுஇன் கை நிகங்கள் பிடுங்கப்பட்டு வன்னி குளத்தில் போடப்பட்டார்.

தாய் தந்தையரை இழந்த இந்த இளைஞன் அவர்களது உறவுகளுடன் வாழ்ந்து வந்தார்.இவரது உறவினர் வீட்டுக்கு சென்ற சிங்கள இனவெறி காவல் துறை இளைஞர் தப்பி ஓடமுற்பட்டதால் சுடப்பட்டதாகவும் ஆனால் நீரில் அமிழ்ந்து இறந்ததாக உறவினர்களிடம் கையொப்பத்தை பெற்று சாட்சியம் வழங்க முற்பட்டால் இதே நிலை தான் வரும் என எச்சரித்து சென்றுள்ளனர்.

இளைஞருடைய தாய் தந்தை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதுடன் இவரது மூத்த சகோதரணை சிங்கள இனவெறி இராணுவம் இவரது கண்முன்னால் சுட்டு கொன்றது.சாட்சியமளித்த இவரை போல் தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள வரணி, இயற்றாலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சி.சுஜீவனா (வயது 15) என்ற பெற்றோரை இழந்த இம்மாணவியும் நல்லிணக்க ஆணைக்குழு முன் தனது தாய் தந்தையரின் படுகொலைக்கு இராணுவமே காரணம் என கூறியிருந்தார்.இவரின் கொலையும் தற்கொலையாக சிங்கள இனவெறி அரசின் பொலிசார் விசாரணையை முடித்துள்ளனர்.

தமிழர்களே நீங்கள் தூங்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எமது சொந்தங்கள் அழிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள் அதனால் மூடிய சிறையில் வைத்து சிங்களம் இன்னும் ஒரு முள்ளிவாய்க்காலை அரங்கேற்றிவருகிறது.கொலைசெய்யப்பட்ட இளைஞரின் செயலை ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிலையத்துக்கு அனுப்புவதற்கான (சாட்சிகளுடன்) ஈடுபடுகின்றவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து தமிழினத்தை புலம்பெயர்ந்த உங்களால் தான் காக்கமுடியும் என்பதை மறவாதீர்கள்.

அனைத்துலகம் விசாரணையை சிங்களத்திடம் ஒப்படைத்தது இதற்காகவா என்ற சந்தேகமும் நடுநிலையாளர்கள் என்று சமாதானம் பேச வந்த அனைத்துலகம் தமிழரை அழிக்க துடிக்கிறதா?? அனைத்துலக மக்களிடம் நீதி வேண்டி போராட தயாராகுங்கள்.

No comments:

Post a Comment