தமிழர்கள் வாழும் நாட்டில் தான் தமிழர்களின் எந்த இலட்சினைகளுக்கும் விடுதலை இல்லை அப்படி கொடுத்தாலும் அதிலே குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று சமுதாயமாக உருவாகியது.
இதை நாங்கள் வெளிப்படுத்து வதால் அசிங்கப்படுவதில் பிற நாடு என்பதைக்கடந்து எங்கள் சகோதரங்கள் வாழும் சகோதர நாடான கனடாவின் ரோரன்ரோ நகரத்தில் தமிழர்களின் கலாசாரத்துக்கு உயர் அங்கிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்பது இன்ப அதிர்ச்சிகள் தருகின்றது.
ரோரன்ரோ முதல்வர் ரொப் ஃபோர்ட் 2012 ஆம் ஆண்டின் தை மாதத்தை ( இம்மாதத்தை ) தமிழ் கலாசார மாதமாக பிரகடனப்படுத்தி உள்ளார்.
ரோரன்ரோவில் வாழ்கின்ற தமிழ் சமூகத்தின் கலாசார விழுமியங்களை கருத்தில் கொண்டு இப்பிரகடனத்தை மேற்கொண்டு உள்ளார் என்று முதல்வர் அறிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment