Lebal

Wednesday, January 18, 2012

சொந்த நிலத்தில் மீள்குடியமர தமிழருக்கு அனுமதி மறுப்பு;சிங்களவருக்கு அனுமதி.

முல்லைத்தீவு முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 105 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்டுப் புளியமுனைக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், முகத்துவாரப் பகுதியில் 247 பெரும்பான்மை இன மக்கள் குடியேற்றப்பட் டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முகத்துவாரப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் இருந்து கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர். 29 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களை இப் பகுதியில் குடி யேற்றுவதாகக் கூறி அழைத்து வந்த அரசு அவர்களைக் கருநாட்டுக் கேணிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக

இடைத்தாங்கல் முகாமில் தங்க வைத்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு முற்பகுதியில் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 105 குடும்பங்களும் கொக்கிளாய் புளியமுனை கிராமத்தில் குடியமர நிர்ப்பந்திக் கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் முகத்துவாரத்தில் தற்போது 247 பெரும்பான்மையின மக்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அங்குள்ள தமிழ் மக்களின் காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பெரும்பான்மையின மக்கள் கடற் தொழில் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் தமிழ் மக்களை மீளக் குடியேற்றுவதற்கோ, முகத்துவாரம் கடலில் தொழிலில் ஈடுபடுவதற்கோ இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனவும், இதனால் தாங்கள் வாழ்வாதார உதவிகள் கூட இன்றி தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment