Lebal

Saturday, January 21, 2012

கொழும்பில் அமையவுள்ள ஆசியாவில்உயரமான கோபுரத்தில் சீனாவின் தொழில்நுட்பங்கள்.

ஆசியாவில் மிகஉயரமான பல்தொழில்நுட்பம் சார் தொலைத்தொடர்பு கொபுரத்தின் நிர்மான பணிகள் இன்று கொழும்பில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.


தாமரைக்கோபுரம் என்று அழைக்கப்படும் இந்த கோபுரம் கொழும்பில் டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தைபகுதியில் அமையப்பொற்றுள்ளது.இதற்கான நிர்மான பணிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 350 மீற்றர் உயரமுடைய இந்தகோபுரம் தொற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக அமையவுள்ளது. நிலமட்டத்தில் இருந்து நான்கு தட்டுமேடைகளை கொண்டதும்ஒருதட்டில் 9மாடிகளை கொண்டதுமாக அமையபெறவுள்ளது.இந்த கோபுரத்தில் 50ற்கு மேற்பட்ட தொலைக்காட்சி வானொலி சேவைகளுக்கான தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்வுள்ளதுடன் 20 ற்கு மேற்பட்ட தொலைதொடர்பு சேவைகளும் இந்த கோபுரத்தில் இணைக்கப்பட்டடு செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் சீனமொழியிலான தொலைக்காட்சி சேவையும் மற்றும் தொலைத்தொடர்பு சேவையும் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment