Thursday, January 19, 2012

இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் - ஜீ.எல்.பீரிஸ்

இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று கிருஸ்ணாவும்,இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ஜீ.எல்.பீரிஸ்ம் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பட்ட காலவரையறைக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இந்தியா மதிக்கிறது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலான அரசியல்தீர்வு ஒன்றையும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வையும் ஒன்றையும் நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் எமக்கு உறுதியளித்துள்ளது.கலந்துரையாடல்கள் மூலம் துரிதமான செயற்முறையுடன் கூடிய ஆக்கபூர்வமான அணுகுமுறையை சிறிலங்கா அரசிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடரும் பேச்சுக்களின் மூலம் அரசியல்தீர்வு ஒன்று எட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணத் தயாராக இருப்பதாக மகிந்த உறுதியளித்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பல ஆக்கபூர்வமான விடயங்கள் உள்ளதை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளதுஎன்றும் கிஸ்ணா தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பது போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கு காலக்கெடு விதிப்பது கடினமான விடயம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment