Thursday, January 19, 2012

திருகோணமலையில் மாதர்சங்க செயலாளர் உள்ளிட்டமூன்று பெண்கள் மீது தூள் விச்சு!

திருகோணமலை பூம்புகார் பிரதேசத்தில் உள்ள வேளாங்கண்ணி வீதியில் பயணித்துக் கெண்டிருந்த மூன்று பெண்கள் மீது இனம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து மிளகாய்த் தூள் வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பூம்புகார் மாதர் சங்கச் செயலாளர் யோகேஸ்வரி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாதர் சங்கச் செயலாளர் திருகோணமலைப் பிரதேச செயலகத்தில் நடந்த பொங்கல் நிகழ்வுக்குச் சென்ற வேளையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவருடன் இரண்டு பெண்கள் வீதியில் சென்று கொண்டிருக்கையில் அவ்வழியால் உந்துருளியில் பயணித்த இருவரே இவர்கள் மீது மிளகாய்த் தூளை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.இதன் காரணமாக அப்பகுதிப் பெண்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment