Friday, January 20, 2012

பேச்சு வார்த்தைக்கு வர இழுபறியாம்…!

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான இன்றைய நாள் பேச்சுவார்த்தைகளும் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென 17,18,19ம் திகதிகளை அரசாங்கம் குறித்திருந்தது.

இருந்த போதிலும், நேற்று முன்தினம் அரச தரப்பினர் சமூகமளிக்காமையினால் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.
இருந்தும், அரச தரப்பினர் பேச்சுக்கு வரும் பட்சத்தில் அதில் கலந்து கொள்வதற்கு நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராகவே இருந்தனர்.

ஆனாலும் அரச தரப்பிலிருந்து பதிலேதும் கிடைக்காததால் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. இதன் காரணத்தினால் இன்றைய நாள் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளயது.
இதேவேளை, அரசாங்கத்தால் நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் த. தே. கூ பிரதிநிதிகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தாலேயே பேச்சுவார்த்தைக்கு சமூகமளிக்கவில்லை என அரச தரப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் தெரிவுக்குழுவிற்கு தமது உறுப்பினர்கள் பங்கேற்காமைக்கான காரணத்தை அரசுக்கு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

நாடாளுமன்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துகொண்டுள்ளதால் அங்கு காரசாரமான விவாதங்கள் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறிய கஞ்சிக்கு என்ன துவாரச்சிரட்டையில் கஞ்சி என்பதாக முடிகின்றது இந்தக்கதையும்.!

No comments:

Post a Comment