Friday, January 20, 2012

கனடாவில் நடைபெற்ற கேணல் கிட்டுவின் நினைவு நிகழ்வும் பொங்கல் விழாவும்

ரோறன்ரோவில் கேணல் கிட்டுவின் 19ம் ஆண்டு நினைவாக நடைபெற்ற தமிழ் புத்தாண்டும் பொங்கல் விழாவும் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின்19ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை கனடா சிறீ ஐயப்பன் இந்து ஆலய கலாச்சாரமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வினை தமிழ் இளையோர் அமைப்பும் கனடா தமிழ்கலை பண்பாட்டுக்கழகமும் இணைந்து நடத்தியிருந்தனர்கடும் குளிருக்கு மத்தியிலும் மக்கள் நிகழ்வில்
கலந்துகொண்டுள்ளார்கள்.நிகழ்வில்சுடரேற்றல். தேசியக் கொடியேற்றம் அக வணக்கம் ஆகியவற்றுடன் நிகழ்ச்சிதொடங்கியது.
தமிழீழத்தேசியக் கொடியை கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவத்தின்தலைவரும் மாவீரர் கப்ரன் வானதியின் சகோதரியுமான திருமதி கலாநிதி குலமோகனுமகனடியத்தேசியக் கொடியை கனடியத்தமிழர் தேசிய அவையின் நிர்வாகசபைஉருப்பினரான அருள் பிரபாவும் ஏற்றினர்நிகழ்வில் சாந்தநாயகி நாட்டிப்பள்ளி ஆசிரியை பூங்குழலி இழங்குமரன்அவாகளின் மாணவிகள இந்தோ கனடா நடனப் பள்ளி ஆசிரியை பத்மினி ஆனந்தின்மாணவிகள்.
நவம் கலைக்கூட ஆசிரியை செல்வி அபிராமி அருள் பாலசிங்கம்மற்றும் கம்சா பவளகாந்தன் ஆகியோரது விடுதலை நடனங்களும். சுவதாசனின்நெறியாள்கையில் தணியாததாகம் என்ற தாளலயமும் இடம்பெற்றதுஅரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் கனடியத்தமிழர் தேசிய அவையின்சார்பில் திருமதி நந்தினி விஐயபவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்இந்நிகழ்வில் கனடா- ரொறன்ரோவில் 2011 மாவீரர் நாளை சிறப்புறநடாத்திய. கனடியத் தமிழர் தேசிய நினைவெழுச்சி அகவத்தின்.
தமிழர் தேசியநினைவெழுச்சி நாள் 2011 அறிக்கை அதன் தலைவர் கலாநிதி குலமோகன்அவர்களால் வாசிக்கப்பட்டது தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன்நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது.








No comments:

Post a Comment