Thursday, January 19, 2012

பொங்குதமிழ் எழுச்சி நாளின் பதினோராம் ஆண்டு இன்று.

தமிழ் மக்களின் உரிமைக்குரலாக அவர்களின் ஏகொபித்த அபிலாசைகளை உலகறிய உரக்க கூறிய பொங்குதமிழ் நிகழ்வின் 11 ஆண்டு பூர்த்தி இன்றாகும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் 2001ஆம் ஆண்டு தை மாதம் 17ஆம் நாள் எழுச்சியுடன் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இவ் பொங்குதமிழ் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு பொங்குதமிழ் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.


தமிழ் மக்களின் ஏகொபித்த அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சுய ஆட்சி போன்றவற்றை வலியுறுத்தி மாணவர்கள் மக்களை ஒன்று திரட்டி தமிழ் மக்களின் அபிலாசைகளை பொங்குதமிழ் பிரகடனமாக வெளியிட்டிருந்தனர்.

இதை தொடர்ந்து அதில் பங்குபற்றி மக்கள் மற்றும் அதை ஒழுங்கு செய்த மாணவர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களின் கடும் அச்சுறுத்லுக்கும் வதைகளுக்கும் உள்ளானார்கள் என்பதும் அனைவரும் அறிந்தது.

இவ் தமிழ் மக்களின் எழுச்சியை உலகறிய வைத்த பல மாணவ தலைவர்கள் படையிரால் திட்மிட்டு
சிறையடைக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சில மாதங்களாக சந்திரிக்கா அரசால் மூடப்பட்டு இருந்ததது.

இவ் பொங்குதமிழை தொடர்ந்து 2003 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் உரிமைக் குரல் பொங்குதமிழ் மாணவர்களால் ஒருங்கிணைக்கப்படு தமிழ் மக்களின் அபிலாசைகள் உலகறிய வைக்கப்பட்டது.

தாயகத்தில் மாணவர்கள் பொங்குதமிழ் மூலகமாக இவ் நடவடிக்கைகைளை மேற்கொணடிருந்தபோது விடுதலைப் போராட்டமும் வேகமாக முன்னகர்ந்ததது.

இன்று தை மாதம் 17ஆம் நாள் பொங்குதமிழ் நிகழ்வின் 11 வருடப் பூர்தியாகும். தமிழீழ விடுதலை நகர்வுகள் தற்போது ஆயுதவழியில் மௌனித்துள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்குரல் வேகத்துடன் நகர்ந்து கொண்டுள்ளது நகர்த்தப்படவேண்டிய கட்டாயத்தினுள் உள்ளது.

இந்த வகையில் தமிழ் மக்கள் அனைவரும் குறிப்பாக இளம் சமூகம் வேகத்துடன் உரிமைக்கான குரலை, பொங்கு தமிழராக பேதங்கள் மறந்து உரக்கக் கூறவேண்டும் என்பது ஈழம் டெய்லியின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.

No comments:

Post a Comment