Thursday, January 19, 2012

வெளிநாடுகளுக்கான உதவிகளில் இலங்கைக்கே அதிகம் – யாழில் கிருஷ்ணா!

இந்திய அரசாங்கம் வெளிநாடுகளுக்கான உதவிகளில் இலங்கை அரசாங்கத்திற்கே அதிக உதவிகளை செய்துள்ளது மேலும் உதவிகளை வழங்குமென்று யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்தார்.யாழ்.பொது சன நூலகம் முன்பதாக அமைக்கப்பட்டிருந்த விசேட அரங்கினில் எஸ்.எம் கிருஸ்ணா
உரையாற்றுகையிலேயே இத்தகவலை வெளியிட்டார். மேலும் அங்கு உரையாற்றுகையில் இந்திய வீட்டுத்திட்டத்திற்காக இந்திய அரசு 270 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்து போரினால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கின்றோம். இந்திய அரசினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சோனியா காந்தி அம்மையாரும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூடிய ஆர்வம் காட்டி வருவதாகவும் வடக்கு – கிழக்கில் இந்திய அரசின் உதவியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டதிற்கென 270 மில்லியன் அமெரிக்க டொலரினை இலங்கை வெளிவிகார அமைச்சர் ஐ. எல். பீரிஸிடம் நேற்று தாம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழர் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கையை உருவாக்க இந்தியா அனைத்து வகை உதவிகளையும் வழங்ககுமெனத் தெரிவித்தார். அத்துடன் இனப்பிரச்சனைக்கான தீர்வொன்றை எட்டுவதில் இந்தியா13வதுதிருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் தீர்வை எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment