Tuesday, May 15, 2012

உதவிகளைப் பெறுவதில் உள்ள அக்கறை இனப் பிரச்சினைக்கான தீர்விலும் தேவை; அமெரிக்க தூதரக அதிகாரி வலியுறுத்து

news வெளிநாட்டு உதவிகள் மூலம் பொருளாதார அபிவிருத்திக்கு அக்கறை காட்டி வரும் இலங்கை அரசு, அதே அக்கறையோடு போர் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமான அரசியல் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் ஜெனிவா தீர்மானம் தொடர்பான செயல்திட்டங்கள் பற்றி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கேள்வி எழுப்பவுள்ளார். இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ள அமைச்சர் பீரிஸ் இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய கருத்தரங்கில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் கலாநிதி போல் காட்டர் இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment