முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்தும சாந்தி வேண்டி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏகாதச உருத்திர மகா
யாகம் கனடா சிறீ ஐயப்பன் இந்து ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இனிதே
நடைபெற்றது. சனிக்கிழமை காலை பத்து மணிக்கு கணபதி ஹோமத்தோடு
ஆரம்பிக்கப்பட்ட இந்த யாகம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நடைபெற்றது.
இந்த யாகத்தில் ரொறன்ரோவைச் சேர்ந்த பல இந்து ஆலயங்களையும் சேர்ந்த சிவாச்சாரியார்களும் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த யாகத்தில் பெருந்திரளான மக்களுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பிரதிநிதிகள்,செயலாளர்கள் மற்றும் கனடா ஐயப்பன் இந்து ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் நாளை மறுதினம் புதன்கிழமை 16-5-2012 மாலை 6-00 மணிக்கு ஸ்காபரோ 1148 பெலமி வீதியில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலயத்தில் எம் உறவுகளின் ஆத்தும சாந்திக்காக மற்றுமொரு யாகம் நடைபெறுவதுடன், அதற்கு மறுதினம் வியாழக்கிழமை 17-5-2012 மாலை 7-00 மணிக்கு ஸ்காபரோ மி்ட்லண்ட் வீதி மற்றும் கிங்ஸ்ரன் வீதி சந்திப்பில் 2559 கிங்ஸ்ரன் வீதியில் அமைந்துள்ள புனித திரேசம்மாள் கத்தோலிக்க ஆலயத்தில் ஆத்தும சாந்திக்கான திருப்பலியும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பிரார்த்தனைகளில் ரொறன்ரோ பொரும்பாகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது.
Roy G Wignarajah - றோய் கா.விக்னராஜா
Secretary - செயலர்
Ministry of Information - தகவற்துறை அமைச்சு
Transnational Government of Tamileelam
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
No comments:
Post a Comment