Lebal

Thursday, May 17, 2012

ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்:



ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று 16.05.2012 மாலை 6 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை குறுகிய காலத்தில் தோழர் திருமலை சிறப்பாக செய்திருந்தார். இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் முதல் கையெழுத்தினை இட்டு இந்நிகழ்வினை தொடங்கிவைத்தார். இரண்டாம் கையெழுத்தினை அய்யா பழ.நெடுமாறன் அவர்களும் மூன்றாம் கையெழுத்தினை மதிமுக பொதுச்செயலாளர் தோழர் வைகோ அவர்களும் இட்டனர்.


இதனைத்தொடர்ந்து மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜவஹருல்லா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தோழர் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை இயக்க தோழர் பண்ருட்டி வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் தோழர் தனியரசு, பெரியார் திராவிடர் கழகத்தோழர் தபசி.குமரன், மே 17 இயக்க தோழர் திருமுருகன், தமிழரைக்காப்போம் அமைப்பின் தோழர் செந்தில், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மருத்துவர் எழிலன், பாவலர் அறிவுமதி, பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
மெரீனா கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அமைப்பின் தோழர்கள் ஈழ விடுதலையின் அவசியத்தை வலியுறுத்து விளக்கி துண்டறிக்கையினை கொடுத்து கையெழுத்திட வைத்தனர்.
பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பலரும் தமிழீழத்திற்கான தம் ஆதரவினை தெரிவித்து கையெழுத்திட்டனர். தமிழக காவல்துறையிலிருக்கும் உணர்வாளர்களும் தமிழீழத்திற்கான தங்கள் ஆதரவினை தெரிவித்து கையெழுத்தினை இட்டது தோழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியினை கனடிய தமிழ் வானொலியின் வணக்கம் கனடா நிகழ்வில் நேரலையாக ஒலிபரப்பினை செய்திருந்தனர்.
இந்நிகழ்வினை இணைக்கப்பட்டுள்ள காணொளிகளும், நிழற்படங்களிலும் நீங்கள் காணலாம்.
முதல் கையெழுத்து
தோழர் நல்லக்கண்ணு உரை
அய்யா பழ.நெடுமாறன் உரை
தோழர் வைகோ உரை
தோழர் ஜவகருல்லா உரை

No comments:

Post a Comment