Lebal

Friday, May 18, 2012

ரவல்கர் சதுக்கத்தில் தமிழ் மக்களை அணி அணியாக திரள வைகோ , சத்யராஜ், வேண்டுகோள்

SATYARAJதலைவர் பிரபாகரன் கட்டி எழுப்பிய தமிழ் ஈழத்தின் சுதந்திரக் கொடியை பறக்கவிடும் நாள் தொலைவில் இல்லை என்ற உறுதியுடன் லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நிகழ்வில் அணி அணியாக திரண்டு கலந்து கொள்ளுமாறு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களிடம் ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வை கோபாலசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதேவளை, நடிகர் சத்யராஜ் விடுத்துள்ள வேண்டுகோளில்,ரவல்கர் சதுக்கத்தில் சனியன்று நடைபெறும் மாபெரும் நிகழ்வில் பிரித்தானியாவின் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொண்டு அந்த நிகழ்வை வெற்றியடைய செய்யுமாறு வேண்டுவதாக கேட்டிருக்கிறார்.ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறும் நிகழ்வு ஒரு உணர்ச்சி விழா , உரிமை விழா, வீர விழா, தமிழ் மக்கள் சிந்திய கண்ணீர் மற்றும் செந்நீரின் விழா என்று விபரித்திருக்கும்
உணர்ச்சிச் கவிஞர் காசி ஆனந்தன், பிரித்தானியாவின் அத்தனை தமிழ் மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உணர்வுடனும் உரிமையுடனும் வேண்டுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment