Thursday, November 29, 2012

தீர்வினை வழங்காமல் 13ஆவது திருத்தம் நீக்கப்படாது: அரசு

gov-sri-lanka60_1அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. ஆகையால், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை வழங்காமல் 13ஆவது திருத்தத்தை அகற்ற முடியாது என்று அரசாங்கம் தெரிவித்தது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

’13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து 19ஆவது திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும். 13ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.
தமிழர்களின் அடிப்படை உரிமையை பாதுகாத்து, அன்றாட தேவையை நிறைவேற்றியே அடுத்த கட்டத்தை நகர்த்தவேண்டும். எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு சகலருக்கும் உரிமை இருக்கின்றது. எனினும் அது தொடர்பில் கூட்டுப்பொறுப்புடன் தீர்மானம் எதுவும் அரசாங்கத்தினால் எட்டப்படவில்லை’ என்றார்.

No comments:

Post a Comment