Thursday, November 29, 2012

மாவீரர் நினைவு கூர்ந்து “தனித்தமிழீழமே தமிழரக்கான தீர்வு” ஒருகோடி கையெழுத்து இயக்கம் பிரான்சில் ஆரம்பிக்கப்பட்டது.-தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

100தமிழீழ மக்களும், இந்த நிகழ்வில் பங்கு பற்றிய இந்நாட்டு மக்களும் மிக உற்சாகமாக தமது கையெழுத்தை இட்டு தமது ஆதரவை தெரிவித்தனர். ஐக்கிய நாடுகள் சபை சிறி லங்காவில் நடைபெற்ற மனிதவுரிமை மீறலை தெரிந்தும் தாம் அதை தடுக்காமல் இருந்து விட்டோம்.
கிளிநொச்சியில் தமிழீழ மக்கள் தம்மை விட்டு விட்டு செல்லாதீர்கள், நீங்கள் சென்றுவிட்டால், சிறி லங்கா அரசு தமிழர்களை கொன்று அழித்து விடுவார்கள் என்று கூறிய போது, தமது பாதுகாப்பை மட்டும் கருத்தில் எடுத்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபை தமது செயட்பாடாளர்களை கிளிநொச்சியில் இருந்து அகற்றியது. தமிழின பேரழிவுக்கு வழி அமைத்து கொடுத்தது.

இன்று முள்ளிவாய்கால் பேரழிவு நடைபெற்று 3 வருடங்களுக்கு பின் தாம் தவறு இழைத்துவிட்டோம் – இனிமேலும் அந்த தவறு ஏற்படாமல் பார்த்து கொள்ளவேண்டும் என்று கூறி நிற்கிறது. இன்றைய இந்த நிலையில் நாம் என்ன செய்யப்போகிறோம்? ஐக்கிய நாடுகள் சபை என்ன செய்யப்போகிறது ? உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் நாம் – தமிழீழ மக்களுக்குரிய தீர்வு தமிழ் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், அதற்குரிய தமிழர்களுக்கு இடையில் சர்வஜன வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்று கோரி ஒரு கோடி கையெழுத்து வெகுஜன போராட்டத்தை கனடா, தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் நிலையில், மற்று அணைந்து நாடுகளும் தமது நாடுகளில் இந்த கையெழுத்து போராட்டத்தை மேற்க்கொள்வதோடு வரும் மார்ச் மாத ஜெனீவா மனிதவுரிமை அமர்வை குறியாக வைத்து இந்த கையெழுத்து போராட்டத்தை நடத்தும் படி கேட்டிகொல்கிறோம்.
பிரான்சில் இந்த போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும், இதற்கான செயல்பாட்டாளர்கள் இதனை தொடர்ச்சியாக செய்வார்கள் என்பதையும், பிரான்சில் வாழும் அனைவரும் இந்த கையெழுத்து போராட்டத்தில் பங்கு கொண்டு 1 கோடி இலக்கை அடைய செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம்.
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

No comments:

Post a Comment