Tuesday, November 20, 2012

புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

d05044fdபுதுக்குடியிருப்பு இரணைப்பாலயம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடி பொருட்களை நேற்று காலை மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித் இடத்திற்குச் சென்ற புலனாய்வு பிரிவினர் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன் போது ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் -370, 12.7 மி.மீற்றர் குண்டுகள் 217, 15 மி.மீற்றர் குண்டுகள் 18, எம்.பி,எம்.ஜீ குண்டுகள்- 640, 18 மி.மீற்றர் எச்.இ.ஏ.ரி குண்டுகள் -2 கைக்குண்டு-01 ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் அனைத்தும் இலங்கை இராணுவத்திடம் செயலிழக்கச் செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்தார்.


No comments:

Post a Comment