Tuesday, November 20, 2012

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிக்கச் செய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிக்கச் செய்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மெய்மறந்து ஆட்டம் போட்டனர். யாழ் பல்கலை மாணவர்களின் உறங்கி போகாத உணர்வுகளின் வெளிப்பாடு இதோ
 நேற்று யாழ் பல்கலைகழகத்தில் இடம் பெற்ற முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன சினிமா பாடல்களும் இடம்பெற்றது.இருந்தபோதும் மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு மெதுவாக ஆடியிருந்தார்கள். பின்னர் “இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள் “என்ற சாந்தன் பாடிய பாடலையும் “எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓயவில்லை விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை “ என்ற செல்லப்பா பாடிய பாடலையும் ஒலிக்க செய்த போது மாணவர்கள் அனைவரும் துள்ளி எழுந்து தமது உள்ளத்தில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

No comments:

Post a Comment