சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மற்றும்
கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோர் கடந்தவாரம்
புதுடெல்லிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, 8வது அனைத்துலக
தரை, கடல், மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு கருவிகள் கண்காட்சியில்
பங்கேற்பதற்காகவே இவர்கள் புதுடெல்லி சென்றிருந்தனர்.
இந்தக் கண்காட்சி கடந்த 6 ம் நாள் தொடக்கம், 9 ம் நாள் வரை இடம்பெற்றது.
இந்தக் கண்காட்சியில், பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஏ.கே.அன்ரனி, மற்றும் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் டி.கே. ஜோஷி ஆகியோருடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஜெனிவாவில் பீரிசும் உரையாற்றுகிறார்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் உரையாற்றவுள்ளார்.
உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அரங்கில் அவர் அடுத்த மாதம் 5ம் நாள் உரையாற்றுவார் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிந்திய நிகழ்ச்சிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் 3ம் நாள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது ஆமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இதில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் ஆரம்ப அறிக்கை மற்றும், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் உரையை அடுத்து, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அரங்கில், பிரித்தானிய மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள் உரையாற்றவுள்ளனர்.
இவர்கள் இதன் போது, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து கருத்து வெளியிடுவார்கள் என்றும், அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் உரைகள் அடுத்த மாதம் 3ம் நாள் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 5ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source:tamil24news
No comments:
Post a Comment