
‘கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த
கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம்.சர்வாதிகாரிகளாக இருந்த
எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன்,பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர்
இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது
என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று முதலமைச்சர் தனது உரையில்
தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மறைமுகமாகச் சாடியே, வடக்கு முதல்வர்
இவ்வாறு தெரிவித்திருப்பதாக ஜனாதிபதிக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர்
போட்டுக் கொடுத்துள்ள தாகவும் ,இதனடிப்படையில் இது தொடர்பில் முழுமையான
விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும்
நம்பகரமாக அறியமுடிகின்றது.
No comments:
Post a Comment