தமிழீழ
விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவரை கைது
செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க
சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது
செய்யப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.மலேஷியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது குறித்த, சந்தேக நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிவராசா சுதாகரன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சந்தேக நபரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்றுமொரு முக்கிய புலிகள் உறுப்பினர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயக்குமாரன் முனீஸ்வரகுமாரன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
source:athirvu
No comments:
Post a Comment