இலங்கைப் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பிரித்தானியாவில் குற்றச்சாட்டு
இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு வரவேற்கப்ட வேண்டியது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் இந்தியாவின் கடுமையான நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இந்தியா இன்னமும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது. யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கை அதிக நாட்டம் காட்டுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பும் சர்வதேச சமூகமும் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.