Lebal

Wednesday, February 05, 2014

முள்ளிவாய்க்கால் மனிதப் புதைகுழியின் நீலப் பிரதிகள்: திடுக்கிடும் தகவல் !


முள்ளிவாய்க்கால் மற்றும் அதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின், புதைகுழிகளின் நீலப் பிரதிகள் இராணுவத்திடம் உண்டு எனவும், அதனை தான் நேரில் பார்த்ததாகவும் ஒரு சாட்சி தற்போது தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட மக்களை இராணுவம் அப்படியே புதைத்தது என்றும், புதைத்த இடங்களை அவர்கள் வரைபடமாக வரைந்து வைத்திருந்தார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது (2009ம் ஆண்டுக்குப் பின்னர்) அவர்கள் அந்த இடங்களை தேடி கண்டுபிடித்து, தோண்டி எலும்புகளையும் எச்சங்களையும் எடுத்து அழித்து வருகிறார்கள் என்றும் அவர் பரபரப்பு சாட்சியம் வெளியிட்டுள்ளார். இதுபோன்ற பல செய்திகள் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போது சாட்சியாக மாறியுள்ள நபரின் கைகளில் புகைப்பட ஆதாரம் உள்ளதாக கூறப்படுகிறது.


குறிந்த இந் நபர் ஐ.நாவின் மனித உரிமை ஆணையகத்தில் சாட்சி சொல்ல இருக்கிறார். வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் இவர் தனது சாட்சியங்களை நேரடியாக வழங்கவுள்ள நிலையில், இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவு ஏற்படலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. தற்போது இலங்கைக்கு ஆதரவாக இருந்து வரும் சில நாடுகள் கூட இறுதி நேரத்தில் தமது எண்ணத்தை மாற்றிக்கொள்ளும் நிலை தோன்றலாம் என்று கூறப்படுகிறது. இதேவேளை இலங்கை அரசாங்கம் மீது இன அழிப்பு விசாரணைகள் நடத்த, இது பெரும் உதவியாக அமையலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் இருக்கலாம் என்ற செய்திகளும் அதிர்வு இணையத்திற்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment