Thursday, February 20, 2014

பாஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் வெளியாக உள்ளது !



2009ம் ஆண்டு மே மாதம் போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை, முள்ளிவாய்க்கால் பகுதி மீது இலங்கை போர் விமானங்கள் பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியது என்பது தொடர்பான புதிய ஆதாரங்கள் வெளிவரவுள்ளது. ஜேர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு ஒன்றினூடாகவே இந்த ஆதாரங்கள் வெளியாகவுள்ளதாக "டச்சுப்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி மாலை 3 மணியளவில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்றும், தாக்குதலில் இருந்து தப்பிய நபர் ஒருவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவரது சாட்சிகள் பதிவுசெய்யப்பட்டு அவை ஜெனிவாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.


குறித்த இந்த ஒரு தாக்குதலில் மட்டும் சுமார் 34 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் நடைபெற்ற பிற தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் எரியும் பாஸ்பரஸ் குண்டுக்கு இரையாகிய காட்சிகள் அடங்கிய வீடியோவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனையும் ஆதாரமாக அவர்கள் இணைக்கவுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. குறித்த இந்த பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலில், புலிகளின் தளபதிகளின் ஒருவரின் மனைவியும் மற்றும் 2 பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளார்கள்.

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு பிரேரணையை கொண்டுவரவுள்ளது. இன் நிலையில் உலகில் பரந்துவாழும் ஈழத் தமிழர்கள் தம்மாலான சாட்சியங்களை திரட்டி, ஜெனிவாவுக்கு அனுப்பி வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். (புகைப்படம் சில இணைப்பட்டுள்ளது)



source:thirvu

No comments:

Post a Comment