Lebal

Monday, March 17, 2014

நேற்றைய தினம் லண்டன் மாநகரை அதிரவைத்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்! ( ஒன்பது காணொளி இணைக்கப்படுள்ளது )

Displaying 19.jpgகாணாமற்போனோர்களுக்காக போராடிய தாயும் சிறுமியும் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

லண்டன் நகரில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களினது வாசல்ஸ்தலத்திற்கு (10 DOWNING ST’ ) முன்பாக இன்று மாலை 3 மணியளவில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடரும் இனஅழிப்பின், தமிழர்களின் கையறுநிலையின், தாயகத்தில் தமிழர்களின் இன்றைய நிலையின் ஒட்டுமொத்த குறியீடாக 
விபூசிகாவும் அவளது தாயாரும் மாறிப் போயுள்ளார்கள்.

இக்கவனயீர்ப்பு ஒன்று கூடலில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் அணிதிரளுமாறு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைத்ததை அடுத்து பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=IQm0ZLLMr5Y

No comments:

Post a Comment