இந்த ஒன்றுகூடலின் அதிரடியாக தோன்றிய தமிழ் உணர்வாளர்கள், சிறிலங்கா அரசின்
தமிழின அழிப்பினை அம்பலப்படுத்தி நிற்கும் வகையில், நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள தபால் அட்டையினை விநியோகித்து, சிங்கள
அரச ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர்.
எதிர்பாராத வகையில் அமைந்த தமிழ் உணர்வாளர்களின் இந்த அதிரடி
நடவடிக்கையினால், நிலைதடுமாறிய ஆர்பாட்டக்காரர்கள் இதனைத் தடுக்க முடியாமல்
திணறியுள்ளனர். தமிழ் உணர்வாளர்களின் இந்த அதிரடி நடவடிக்கையினை மூடி
மறைத்து, லண்டனில் இலங்கையர்கள் ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக போராட்டமென
சிங்கள அரச தனது ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழின அழிப்பினை அம்பலப்படுத்தி அதிரடியாக புகுந்த தமிழ் உணவர்கள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் பிரதிநிதிகள் என செய்திகள்
தெரிவிக்கின்றன.
|
No comments:
Post a Comment