
கடந்தகால சம்பவங்கள் குறித்து விசாரிக்க தாம் மேற்கொண்டிருக்க வேண்டிய
பணிகளை, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொள்ள தவறிவிட்டதாக
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின்
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த நிலையிலேயே இலங்கைக்கு எதிரான
சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி
முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில்
விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.இதில் அந்த பிரேரணை
நிறைவேற்றப்பட்டால், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ள மனித
உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நடவடிக்கை எடுக்கலாம்.என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment