Lebal

Thursday, March 27, 2014

ஜெனீவா தீர்மானத்துக்கு 23இற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிக்க வாய்ப்பு!

News Serviceஜெனீவா மனிதஉரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது. இன்று அந்த விவாதம் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலசமயம் அது நாளைக்கும் தள்ளிப் போக வாய்ப்புண்டு என ஜெனீவா வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று ஜெனீவாவில் காலை, மதியத்துக்குப் பின், மாலை என மூன்று அமர்வுகள் இடம்பெற்றன. அதில் இரண்டாவது அமர்வின் போது மட்டுமே இலங்கை தொடர்பான பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

   அதேவேளை, இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 23 முதல் 25 நாடுகள் ஆதரவு வழங்கும் என்றும், 12 முதல் 14 நாடுகள் எதிர்ப்பு வெளிப்படுத்தும் என்றும் ஜெனீவாத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் 24 நாடுகளின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேறினால் அது குறிப்பிடத்தக்க அம்சம் என்றும் அவை மேலும் தெரிவித்தன.

No comments:

Post a Comment