வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு
கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
தெரிவித்தார். துர்க்கா மணிமண்டபத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இன்று காலை
10 மணிக்கு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்
போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அண்மைக்காலமாக தமிழ் பெண் யுவதிகளை
இராணுவத்தில் இணையுமாறு அழைக்கின்றனர். அப்படியானால் ஏன் ஆண்களை
அழைக்கவில்லை? இராணுவத்தினர் இளம் பெண்களை வீடு வீடாக சென்று இராணுவத்தில்
இணையுமாறு வலிந்து கேட்கின்றனர். இதேவேளை பயம், வறுமை, பாதுகாப்பற்ற தன்மை
போன்ற பல காரணங்களினால் எம்பெண்கள் இராணுவத்தில் இணையக் கூடும்.
|
No comments:
Post a Comment