Lebal

Monday, April 28, 2014

ஜெனிவா தீர்மானம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின், இருதரப்புப் பேச்சுக்களின் போது இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தீர்மானத்தை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றால், சிறிலங்கா அரசாங்கம் பாதகமான விளைவுகளை சந்திக்க கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.



அத்தகைய சூழ்நிலையில், சீனாவினால் உதவ முடியாமல் போகக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தேவைப்பட்டால், ஐ.நா பாதுகாப்புச்சபையில் சிறிலங்காவுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சீன பிரதி வெளிவிவகார அமைச்சரின் இந்தப் பயணம் பெரியளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment