Lebal

Tuesday, May 13, 2014

கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் மொழி தமிழ்ப் பாடத்தில் 1311 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் மொழி தமிழ்ப் பாடத்தில் 1311 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலம் முழுவதும் முதல் மொழி தமிழ்ப் பாடத் தேர்வை 1327 மாணவர்கள் எழுதினார்கள்.
இதில் 1311 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 மாணவர்கள் 125-க்கு 123 மதிப்பெண்களைப் பெற்றனர்.
தூய அல்போன்ஸ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அர்ச்சனா, அக்ஷயா, கமபாபாய் உயர்நிலைப் பள்ளி மாணவர் கே.கார்த்திக், எஸ்.வினிதா ஆகியோர் 123 மதிப்பெண்கள் பெற்றனர்.

அர்ச்சனா 625-க்கு 557 மதிப்பெண்கள் (89.12 சதம்) பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-90, கன்னடம்-95, கணிதம்-81, அறிவியல்-80, சமூக அறிவியல்-88. அர்ச்சனாவின் தந்தை கோபால் கூலிவேலையும், தாய் மீரா வீட்டு வேலையும் செய்து வருகின்றனர்.
அர்ச்சனா கூறியது: எனது தமிழாசிரியை கார்த்தியாயினி, ஆசிரியர் சாரதி ஆகியோர் அளித்த ஊக்கத்தின் காரணமாக தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புகிறேன் என்றார் அவர்.
அக்ஷயா 625-க்கு 499 மதிப்பெண்கள் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-80, கன்னடம்-72, கணிதம்-83, அறிவியல்-71, சமூக அறிவியல்-70.

அக்ஷயாவின் தந்தை சுரேஷ்பாபு உடல்நலக் குறைவால் வேலையில்லாமல் உள்ளார். இவரது தாய் விசாலாட்சி வீட்டுவேலை செய்து வருகிறார்.
அக்ஷாô கூறியது: தமிழில் 123 மதிப்பெண்கள் பெற எனது தமிழாசிரியை கார்த்தியாயினி, பெற்றார் அளித்த ஊக்கமும், ஒத்துழைப்புமே காரணம். வீட்டில் படிக்க இயலாததால் பள்ளியில் 8 மணிவரை படிக்க வாய்ப்பு தந்தனர். சிறப்பு வகுப்புகள் நடத்தினர். சிறந்த கணக்காளராக விரும்புகிறேன் என்றார் அவர்.
கார்த்திக் 625-க்கு 461 மதிப்பெண்கள் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-75, கன்னடம்-66, கணிதம்-51, அறிவியல்-64, சமூக அறிவியல்-70.
கார்த்திக்கின் தந்தை குமார் காவலாளியாகவும், தாய் செந்தாமரை வீட்டுவேலையும் செய்து வருகிறார்கள்.
கார்த்திக் கூறியது: தமிழாசிரியை ஸ்ரீமதி, தலைமை ஆசிரியை சரளா ஆகியோர் ஊக்கமளித்தனர். எனது படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். பொறியாளராக விரும்புகிறேன் என்றார் அவர்.
எஸ்.வினிதா 625-க்கு 527 மதிப்பெண்கள் (84.32 சதம்) பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-670, கன்னடம்-95, கணிதம்-65, அறிவியல்-82, சமூக அறிவியல்-95.
தமிழ்ப்பாடத்தில் 121 மதிப்பெண்களை 13 பேரும், 120 மதிப்பெண்களை 12 மாணவர்களும் பெற்றனர்.source:denamani

No comments:

Post a Comment