Friday, May 16, 2014

புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா – ஆட்சியின் கடைசி நாட்களில் பழிதீர்த்தது காங்கிரஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்து, இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2014ம் ஆண்டு மே 14ம் நாள் தொடக்கம், ஐந்து ஆண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்படுவதாக, மத்திய உள்துறை அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, 1992 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

அதன் பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை இந்த தடை நீடிப்புச் செய்யப்பட்டு வந்தது.


கடைசியாக, 2012ம் ஆண்டு இந்த தடை நீடிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், இம்மாதத்துடன், இந்த தடை நீங்குவதால், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடையை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, நீடிக்கப்பட்டு வந்த இந்த தடை, காங்கிரஸ் அரசாங்கத்தின் கடைசி சில நாட்களுக்குள் ஒரேயடியாக ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment